ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களின் விலை குறைகிறது. 4 மீட்டருக்கு குறைவான கார்களின் ஜிஎஸ்டி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனால் கார்கள் விலை குறையவுள்ள நிலையில், இந்த விலை குறைப்பு 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஹூண்டாய் அறிவித்துள்ளது.