Also Watch
Read this
சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. ரேஷன் கார்டுகளுடன் தரையில் அமர்ந்து மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம்
Updated: Sep 10, 2024 05:18 AM
தஞ்சை அருகே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் கார்டுகளுடன் தரையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை அண்ணாநகர்-கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள எல்.சி 94 ரயில்வேகேட் பாதை கடந்த 2012 ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இந்நிலையில் அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க ஒப்புதல் அளித்த ரயில்வேதுறை அதற்காக 2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அதற்கு எதிர்ப்பு போராட்டத்தில் குதித்த பொதுமக்கள், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாது என்றும் சுரங்கப்பாதைக்கு பதில் ரயில்வே கேட் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved